அங்காடிதெரு பட நடிகை சிந்து காலமானார்

07.08.2023 08:27:15

நடிகை சிந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'அங்காடிதெரு' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் சிந்து. இவர் நாடோடிகள், தெனாவெட்டு, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.  சிந்து நடிகை சிந்து மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து புற்று நோயின் தீவிரம் அதிகமானதால் அவரது ஒரு பக்கம் மார்பகம் எடுக்கப்பட்டது. இதனால் அவரால் 10 முதல் 20 நிமிடங்கள் வரைகூட தொடர்ந்து உட்கார முடியாத நிலை ஏற்பட்டு இரவு நேரத்தில் படுக்க முடியாதவாறு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பல நேர்காணல்களில் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை சிந்து இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.