குழப்பத்தில் முக்கிய கட்சி!

28.09.2022 21:59:47

ரணில் விக்ரமசிங்கவிற்கு என்ன நடந்தது 

நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறி செயற்படும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை

 

போராட்டம் ஊடாக அதிபரான ரணில் விக்ரமசிங்க, காகத்துடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகித்து வருகிறார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதுவொரு மோசமான செயல். குறிப்பாக நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறும் செயற்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.