இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோர தீர்மானித்தது எடப்பாடி தரப்பு!

19.01.2023 22:58:10

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையகத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்த வாரம் டெல்லி சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது இதுகுறித்து பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.