
ரணில் குறித்து தற்போது வெளியான விஷேட செய்தி.
29.08.2025 08:12:13
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சாதாரண அறைக்கு மாற்றப்படுவார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவாரா இல்லையா என்பதை ரணில் விக்ரமசிங்க அல்லது அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, மேலதிக சிகிச்சைக்காக கடந்த 23 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 26 ஆம் திகதியன்று ரணில், மூன்று சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.