அடுத்த 3 வருடங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதி

16.01.2022 05:47:07

ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, எதிர்வரும் மூன்று வருடங்களில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக வீதியின் குருநாகல் முதல் மீரிகம வரையான பகுதியை நேற்று (15) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.