தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை!

22.02.2025 09:19:14

கொழும்பு கொட்டாஞ்சேனை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய சசி குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

கடை ஒன்றில் இருந்தவரை இலக்காக கொண்டு இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் கிரான்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் துப்பாக்கியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்