விஜய் சேதுபதி - கமல் ரெண்டு பேரையும் வச்சி ஒருபடம்!
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான பத்தா திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருந்தார்.
இந்நிலையில், பத்தா பட வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் அட்லி தொடக்கத்தில் ‘என் மீது விஜய் சேதுபதிக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.. அதை அவரே சொல்லியிருக்கிறார்.. அவரது பேச்சு மிகவும் நேர்மையாக இருக்கும்.. ஒரு கலைஞனாக எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார்.. ஒரு சகோதரராக கற்றுக் கொடுத்திருக்கிறார்..
அவருக்கு நான் மரியாதை கொடுக்கிறேன்.. விஜய் சேதுபதியை ஒரு நல்ல மனிதராக எனக்கு பிடிக்கும்.. அதற்கு பிறகுதான் அவரை நடிகராக நான் பார்க்கிறேன்.. விஜய் சேதுபதி ஒரு ஆன்மீகவாதி.. எனக்கு ரொம்ப நாளா ஆசை.. கமல் சார், விஜய் சேதுபதி இருவரையும் வைத்து ஒரு படம் பண்ணணும்’ என்று பேசியிருக்கிறார்.