6 மாதங்களில் சூழல் மாறும்: ஆப்கன் அதிபர் நம்பிக்கை

02.08.2021 15:00:00

ஆறு மாதங்களில் ஆப்கானிஸ்தானின் சூழல் மாறும் என ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் நேட்டோ படை வீரர்கள், ஆப்கனை விட்டு வெளியேறி வருவதால், தலிபான் பயங்கரவாதிகள் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களை கைப்பற்றியதுடன், அண்டை நாடுகளுடன் சந்திக்கும் முக்கிய எல்லை சாலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி கூறியதாவது: பயங்கரவாதத்தால் மிகவும் பாதிப்பபடைந்துள்ள நம் நாட்டின் நிலை, இன்னும் ஆறு மாதங்களில் சீரடையும்.

தலிபான்கள் நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி, அமைதி மற்றும் செழுமையை விரும்பவில்லை. ஆப்கனின் அரசுப்படைகள் தலிபான் குழுக்கள் மீதான வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக, கந்தஹார் விமான நிலையத்தின் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஆப்கன் சுதந்திர மனித உரிமைகள் ஆணையத்தின் (AIHRC) தகவலின்படி 2021-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 1,677 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,644 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.