“சிறையில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியாது”.

22.04.2026 13:49:51

தமிழகத்தில் நாளை (23.04.2026) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, கடந்த 1 மாத காலமாக அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வந்தனர். அதன்படி திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இத்தகைய சூழலில் தான் நேற்று (21.04.2026) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.

 

இத்தகைய சூழலில் தான் கைதாகி சிறையில் உள்ள ஹரிநாடார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மனு இன்று (22.04.2026) விசாரணைக்கு வந்தது. அதன்படி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவைச் சுட்டிக்காட்டி, “குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது” எனக் கூறி ஹரிநாடாரின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.