புஷ்பா 2 சாதனையை முறியடித்த துரந்தர் 2!.
ஆதித்யா தோர் இயக்கத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்து உருவான துரந்தர் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 1350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில்தான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் துரந்தர் தி ரிவெஞ்ச் என்கிற பெயரில் உருவாகி கடந்த 19ம் தேதி உலகெங்கும் வெளியானது. தமிழிலிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
ரன்வீர் சிங் ஹீரோவகா நடிக்க மாதவன், சாரா அர்ஜூன், அக்ஷய் கண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஹீரோ ரன்வீர் சிங் பாகிஸ்தான் நாட்டில் உளவாளியாக சென்று இந்திய ராணுவத்திற்கு சேவை செல்வது போல படத்தில் காட்சிகள் வருகிறது. எனவே, வட மாநிலங்களில் வசிக்கும் மக்கள் இந்த படத்தை பெரிதும் விரும்புகிறார்கள்..
படம் வெளியாகி 5 நாட்களில் இப்படம் 800 கோடி வரை வசூல் செய்து விட்டது. ஹிந்தி சந்தையில் புஷ்பா 2 படம் செய்த வசூலை துரந்தர் 2 முறியடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.