யாழில் 43,682 பேர் பாதிப்பு
28.11.2024 07:48:01
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிக்கையிட்டுள்ளது.
இரவு 7.30 வரையிலான நிலவரப்படி 12,970 குடும்பங்களை சேர்ந்த 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 129 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் 66 பாதுகாப்பு இடைத்தங்கல் முகாம்களில் 1,634 குடும்பங்களை சேர்ந்த 5ஆயிரத்து 793 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.