சர்தார் படம் பார்த்துட்டு இப்படியெல்லாம் யோசிப்பாரா!..
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். இதில் அப்பா கார்த்தி இந்திய உளவாளியாக நடித்த அசத்தியிருந்தார். மேலும் ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் கார்த்திக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில்தான் தற்போது சர்தார் 2 படம் உருவாகியிருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில்தான், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ‘சர்தார் படத்தை பலரும் பாராட்டினாலும் ரஜினி சார் பாராட்டியதை என்னால் மறக்க முடியாது. அவர் எனக்கு போன் செய்து ‘கண்ணா படம் பார்த்தேன்.. ரொம்ப நல்லா இருந்தது.. வீட்ல இருந்த பிளாஸ்டிக் எல்லாம் தூக்கி எறிய சொல்லிட்டேன்.. நீங்க அந்த படத்தை அருமையாக உருவாக்கியிருக்கீங்க’ ன்னு சொன்னர்’ என சொல்லியிருக்கிறார்.