மாலபே இலங்கை கணினி தொழில்நுட்ப நிறுவகத்தை மஹாபொல நிதியத்திற்கு மாற்ற நடவடிக்கை
27.10.2021 05:42:49
சர்ச்சைக்குரிய மாலபே இலங்கை கணினி தொழில்நுட்ப நிறுவகத்தை, மீளவும் மஹாபொல நிதியத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.