சவுதி அரேபியாவில் பயங்கர சாலை விபத்து

30.01.2025 07:50:39

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜிஷான் நகரில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜிஷான் நகரில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெட்டா நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர்.

இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 9 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த இந்தியர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.