44 பேர் சடலமாக மீட்பு

10.05.2022 16:23:07

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தது. தொடர்ச்சியாக உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷிய படைகள், உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரத்தில் 

கடந்த மார்ச் மாதம் கடுமையான தாக்குதல் நடத்தியது. அப்போது பல கட்டிடங்களையும் ரஷிய ராணுவம் தகர்த்தது. 

 

இந்த நிலையில்,  கார்கிவ் பகுதியில் ரஷிய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில்  இருந்து  400 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக  கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கார்கிவ் நகர நிர்வாகி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த தகவலை தெரிவித்தார். 

 

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான ரஷிய படைகள் நடத்திய மற்றுமொரு கொடூரமான போர்க்குற்றம் இது என்றும் தெரிவித்துள்ளார். எனினும் கார்கிவ் பகுதியில் எந்த இடத்தில் இந்த கட்டிடம் உள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.