டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றி !
ரி-10 தொடரின் 23ஆவது லீக் போட்டியில், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபி மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியும் நோதர்ன் வோரியஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோதர்ன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் மோறிஸ் 39 ஓட்டங்களையும் ஆந்ரே ரஸ்ஸல் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நோதர்ன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், ஒஷேன் தோமஸ் 3 விக்கெட்டுகளையும் தாஹிர் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நோதர்ன் வோரியஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஸ் வைட்லீ 26 ஓட்டங்களையும் ரொவ்மன் பவல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், வஹாப் ரியாஸ், ஓடியன் ஸ்மித் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் வஹாப் ரியாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.