ஆட்டத்தின் 83 நிமிடங்களும் நடப்பு சாம்பியன் போர்த்துகலுக்கு தண்ணி காட்டிய ஹங்கேரி

16.06.2021 09:45:29

ஆட்டத்தின் 83 நிமிடங்களும் நடப்பு சாம்பியன் போர்த்துகலுக்கு தண்ணி காட்டிய ஹங்கேரி அணி கடும் போராட்டத்தை முன்னெடுத்தது.

இறுதியில் 9 நிமிடங்களில் 3 கோல்களை பதிவு செய்து ஹங்கேரி அணியை சிதைத்து அனுப்பியது போர்த்துகல்.

3ல் 2 கோல்களை பதிவு செய்து அணியின் நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் அசத்தியுள்ளார். 1964-ல் சோவியத் அணிக்கு பிறகு யூரோ கிண்ணம் துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணி 3-0 என வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

புடாபெஸ்ட் நகரின் Puskás Aréna-வில் நிரம்பி வழிந்த 60,000கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இரட்டை கோல்கள்( 87-வது நிமிடம் மற்றும் 92-வது நிமிடம்) அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.