'தேர்தல் முடிவுக்கு பிறகு தலைமை மாற்றமா?'.

27.04.2026 15:32:57

மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போதைய தலைவர் செல்வபெருந்தகை மீது பல்வேறு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் இது குறித்து மேலிடம் வரை புகார்களை சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தேர்தல் முடிவுக்கு பின் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை மாற்றப்படும் என்று இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தமிழக காங்கிரஸ் தலைமைக்கான பரிந்துரை லிஸ்டில் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லகுமார், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல முன்னாள் தலைவரர்களான கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசு, கே.வி.தங்கபாலு ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.