RJ பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல்!
02.06.2026 14:58:15
|
கருப்பு படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருக்கிறது. அதனால் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தற்போது மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார். அந்த படம் பற்றி தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார் அவர். அதில் பல்வேறு விஷயங்களை அவர் கூறி உள்ளார். |
|
கருப்பு படத்தின் ஜெயிலர் படத்தின் ரத்தமாரே பாடலை பயன்படுத்த தான் நினைத்ததாகவும், ஆனால் அதை 5 நொடி பயன்படுத்த 25 லட்சம் ரூபாய் கேட்டார்கள் எனவும் அவர் கூறி உள்ளார். அது மிகப்பெரிய தொகை என்பதால், தானே 'ரத்தமாறன், வெற்றிமாறன்' என அதை மாற்றி பாடியதாகவும் கூறி உள்ளார். |