வெற்றிக்காக மாத்திரமே தேர்தலில் நின்றார்கள்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுவிப்பதுடன், மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்போம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். |
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார கூட்டம் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அதில், உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த மாவட்டத்திற்கு வந்தார். வன்னி மக்கள் ஓரளவு வாக்கை அவருக்கு வழங்கியிருந்தனர். இந்த தேர்தலில் அவர் வருவாரா? அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவரும் வந்தார். இந்த தேர்தலுக்கு அவர் இங்கு வருவாரா? வரவில்லை.ஏன்? அவர்கள் அவர்களது வெற்றிக்காக மாத்திரமே தேர்தலில் நின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் வன்னியில் எனக்கு விழுந்த 21 ஆயிரமாகும். அந்த வாக்குகளும் எமது வெற்றிக்கு பாரிய ஒரு பங்களிப்பையும் சக்தியையும் வழங்கியிருந்தது. வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது. இந்த காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குவோம். எங்களுக்குத் தெரியும்.இங்கு யுத்தம் ஒன்று நடந்தது பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்தோம். இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்றும் வாக்குறுதியளித்தார். இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதை தென்பகுதி எதிர்க்காது. ஆனால், அன்று அப்படி அல்ல வடக்கில் இவ்வாறு ஒன்று நடந்தால் தென்பகுதி அதற்கு எதிராக இருந்தது.எங்களை பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்றார்.. வடக்கின் மீன்வளத்தை பெரிய அளவில் வேறு நாடுகள் வந்து சூறையாடுகிறன. எமது மீன் வளம் அழிவதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். நாங்கள் அரசு என்ற வகையில் எமது மீனவர்களின் உரிமைக்காக வடக்கில் வாழும் மீனவர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றார். . சூரிய ஒளி இன்று மதிப்பு வாய்ந்ததாக உள்ளது. அது எமது சக்தி. அதை துண்டு துண்டாக விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நாங்கள் மீளாய்வு செய்யவேண்டும். இந்த வளங்களை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும். கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சனை இங்கு இங்கு இருக்கிறது. அவற்றை தடுக்க வேண்டும். எனவே புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்து செல்லவேண்டும். அத்துடன் எமது முதலாவது வரவு-செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் இருக்கும் என்றார். |