அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் ; கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் வேண்டுகோள்
21.09.2021 14:05:20
இன்றைய அவசர நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் கொவிட் தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் சடலம் தகனம் செய்வதற்காக வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சமயம் குறித்த சடலம் அவரது வீட்டுக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
இதுதொடர்பாக நான் தற்போது கருத்துக்கள் எதனையும் கூற முடியாது. இந்த நோய்த்தொற்று தொடர்பில் சரியான முறையில் கண்டறிந்து பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய அதிகாரிகள் இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் நடந்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்