திருட வந்த இடத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடிய வாலிபர்

09.08.2023 12:00:33

சீனாவில் வாலிபரின் கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் பலி

வீடியோக்களின் அடிப்படையில் வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வருகிறர்கள். நாயுடன் திருடன் கொஞ்சி விளையாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. வீடுகளில் நாய் வளர்ப்பதற்கு முக்கிய காரணம் திருடர்களிடம் இருந்து வீட்டை காக்கும் என்பது தான். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்கு நேர்மாறாக உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்குட்பட்ட சாண்டியாகோ நகரில் ஒருவரின் வீட்டு கேரேஜூக்குள் விலை உயர்ந்த சைக்கிள்கள் இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் அங்கு நுழைந்து ரூ.1.7 லட்சம் மதிப்பிலான சைக்கிளை திருடி செல்ல முயன்றார். அப்போது உள்ளே இருந்த நாய் ஒன்று திருடனை நோக்கி வந்தது. நாயை கண்டதும் திருடன் அங்கிருந்து செல்லாமல், வெளியே எடுத்த சைக்கிளை உள்ளே விட்டுவிட்டு அந்த நாயுடன் கொஞ்சி விளையாடினார். அப்போது அந்த நாயை பார்த்து அவர், 'ஐ லவ் யூ டூ' என்று கூறுகிறார். மேலும் நாயுடன் சிரித்து விளையாடுவது போன்ற காட்சிகளும் அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோக்களின் அடிப்படையில் வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வருகிறர்கள். இதற்கிடையே நாயுடன் திருடன் கொஞ்சி விளையாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.