மகிந்த, கோட்டாபயவிற்கு காத்திருக்கும் ஆபத்து!

19.01.2023 08:46:12

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளன, யுத்த வெற்றிக்கு உத்தரவிட்ட கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா மற்றும் இராணுவத்தினருக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்மாதிரியான தீர்ப்பாக அமையலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(18.01.2023) உரையாற்றிய போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்த நிலையில், அந்த விவாதத்தில் சரத் பொன்சேகாவவிற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையிலேயே தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்னும் சில காலத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இது போன்ற தீர்ப்பிற்கு உள்ளாகலாம். அதாவது அவர் யுத்தத்திற்கு உத்தரவிட்டிருப்பார், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் விமர்சனங்களை கூறிக் கொண்டு தானும் அது போன்ற குற்றங்களை செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.