தனிமைப்படுத்தல் மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளது!
05.02.2021 08:23:06
மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி பொசலேன் பிரதேசம் இசுறுமாவத்தை மற்றும் மக்கள் குடியிறுப்பு தொகுதி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட போன்து பிட்டிய 727 கிராமசேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்