அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு- செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

04.08.2023 10:07:58

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக 2 வழக்குகள் தொடரப்பட்டது. எழுத்துப்பூர்வ பதிலை மனுதாரர் தரப்பில் இன்று தாக்கல் செய்தனர். சென்னை: Powered By PauseUnmute Loaded: 0.34% Fullscreen அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு இலாகா இல்லாத அமைச்சராக எந்த அடிப்படையில் செந்தில் பாலாஜி பதவியில் இருக்கிறார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வழக்கு செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த தனது உத்தரவை கவர்னர் திரும்பபெற அதிகாரம் இல்லை என்றும் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, ஆதிகேசவலு ஆகியோர் கவர்னர் அலுவலகத்துக்கு உத்தரவிட கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ பதிலை மனுதாரர் தரப்பில் இன்று தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.