கமல் சார் நீங்களே வாங்க...

28.11.2021 16:53:00

தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சியின் ஒன்றான விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நான்கு சீசன்களை கடந்து தற்போது உள்ளது. சீசன் 5 தொடங்கி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது.

மேலும், இந்த ஐந்து சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்நிலையில் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ள நிலையில் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பதிவில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. கொள்வாரா? குறித்து தொலைக்காட்சி தரப்பில் விவாதமும் போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் கமல்ஹாசனிடம் கலந்து ஆலோசித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பதாக கூறி இருந்தனர்.

இந்நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் மட்டும் இல்லாமல் வழக்கம் போல் அந்த 2 நாட்களும் நடக்கிறதை ஒளிபரப்பலாம் என்று கூறப்பட்டது. அதே நடக்கிறதை கமல்ஹாசன் வீட்டிலிருந்தே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒளிபரப்பலாம் என்று இரண்டு கோணத்தில் விஜய் டிவி பிக் பாஸ் குழு தீவிர ஆலோசனை செய்து கொண்டிருந்தது. ஆனால், கமல் கண்டிப்பாக கொரோனா தொற்று காரணமாக அவர் வைத்தியசாலையில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.