ஆபத்தில் இருந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்ட ஈழத்தமிழர்கள்.

07.10.2025 14:47:16

இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழுந்துள்ள கண்டங்களை ஐ.நா அறிக்கையிட்டுள்ள பின்னணி தற்போது சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதாக கருதப்படும் சிறிலங்கா இராணுவ அத்துமீறல்கள் தொடர்பில் சர்வதேசத்திடம் இன்றளவும் சர்ச்சைகள் வலுத்து வருகின்றன.

இந்த பின்னணியில் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான குழு கூட்டத்தில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா விசேட பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தது.

குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையானது ஈழத்தமிழர்களின் கோரிக்கைகள் இறுதி நேரத்தில் காப்பற்றப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் விவரித்துள்ளனர்.

எனினும் இந்த விடயம் தோல்வியடைந்திருந்தால் ஐ. நாவில் இருந்து இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் விடயங்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.