வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த விரைவு நீதிமன்றங்கள்.

23.07.2026 15:11:00

நாட்டின் எதிர்கால தூண்களான இளைஞர்களின் உழைப்பையும், நம்பிக்கையையும் சிதைக்கும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்செயல்களை எந்த வகையிலும் சகித்து கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைத்து விதமான கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

 

இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் விரைவாக நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற்காக, பிரத்யேகமாக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும், மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

 

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு விரைவான நீதி வழங்குவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு வழிமுறைகளும் வகுக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையானது போட்டி தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.