
ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அண்மைய இலக்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவாகத் தெரிகிறது.
2016 ஆம் ஆண்டு தேர்தலில், ஒபாமாமோசடி செய்ததாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்திற்குள் புலனாய்வுப் பிரிவு (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளியை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளி, எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்று கூறுவதோடு தொடங்குகிறது.
பின்னர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல்வேறு ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல” என்று கூறுவதைக் காட்டுகிறது.
காணொளியின் சில நொடிகளுக்குப் பின்னர், ஒபாமா செம்மஞ்சள் நிற சிறைச்சலை சீருடையுடன், தடுப்புக் காவலில் இருப்பதை காட்டுகின்றது.
ட்ரம்ப் தனது சமூக தளத்தில் வெளியிட்ட இந்த காணொளி வைரலாகி, விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
2016 தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு இயக்குநர் (DNI) குற்றம் சாட்டியுள்ள பின்னணியில் இந்த காணொளி வந்துள்ளது.
ஒபாமா மற்றும் முன்னாள் மூத்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே, சுவாரஸ்யமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரியில் நடந்த முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் ட்ரம்ப் மற்றும் ஒபாமா நட்புடன் உரையாடினர்.
அவர்களின் எதிர்பாராத நட்பு தருணத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியது.