தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியை தாண்டிய கருப்பு!.

23.05.2026 10:54:55

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹிரோவாக நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் கருப்பு, சூர்யாவுக்கு ஒரு சூப்பர்ஹிட் பல வருடங்களாகவே அமையாத நிலையில் இந்த படம் சூர்யா ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

எனவே இந்த படம் துவக்கம் முதலே நல்ல வசூலை பெற துவங்கியது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் கருப்பு படம் நல்ல வசூலை பெற்று வருகிறது..

இந்நிலையில், கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் தற்போது 100 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. உலக அளவில் 207 கோடியை தாண்டியதாக தயாரிப்பு நிறுவனம் நேற்றே அறிவித்திருந்தது. இந்த வார இறுதிக்குள் கருப்பு திரைப்படம் 225 கோடி வசூலை தாண்டி விடும் என கணிக்கப்படுகிறது. சூர்யா இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே கருப்பு திரைப்படம் அதிக வசூலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.