
வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட GMOA .
11.08.2025 09:00:00
இன்று (11) தொடங்கவிருந்த நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது.
மருத்துவர்களின் இடமாற்றங்களை செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று காலை 8.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்குவதாக GMOA அச்சுறுத்தியிருந்தது.
இருப்பினும், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடனான சந்திப்பின் “சாதகமான முடிவுகளை” அடுத்து, GMOAவின் நிர்வாகக் குழு இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
மேலும், முன்னேற்றங்களைக் கண்காணித்து அதற்கேற்ப முடிவு செய்வதாக GMOA கூறியது.