இலங்கை அணியின் கனவை நொறுக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள்...
காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியடைந்தது.
காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 212 ஓட்டங்களும், அவுஸ்திரேலிய அணி 321 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. தொடக்க வீரர்களான நிசங்கா, கருணாரத்னே ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
சுழற்பந்துவீச்சின் ஆதிக்கத்தில் இலங்கை அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. குசால் மெண்டிஸ் 8 ஓட்டங்களில் லயன் பந்துவீச்சிலும், ஏஞ்சலோ மேத்யூஸுக்கு பதிலாக களமிறங்கிய ஒஷாட பெர்னாண்டோ 12 ஓட்டங்களில் ஸ்வெப்சன் பந்துவீச்சில் வெளியேறினார்.
எதிர்ப்பாராத விதமாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில், இலங்கை அணியின் நான்கு வீரர்கள் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 113 ஓட்டங்களில் சுருண்டது. அவுஸ்திரேலிய தரப்பில் ஹெட், லயன் தலா 4 விக்கெட்டுகளையும், ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணிக்கு 5 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி 4 பந்துகளில் அணியை வெற்றி பெற வைத்தார்.