இமாசல பிரதேச பேருந்து விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு !
11.03.2021 09:17:28
இமாசல பிரதேச பேருந்து விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.
இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள தீசா பகுதியில் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நேற்று (புதன்கிழமை) விபத்துக்கு உள்ளாகியது.
குறித்த பேருந்தில் 20 பேர் பயணித்த நிலையில், அவர்களுள் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 11 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.