தமிழகத்தை வந்தடைந்தது காவிரி நீர்.

04.08.2026 14:18:14

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தடைந்தது. கர்நாடக அணை நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்தானது படிப்படியாக உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கபினி அணையில் இருந்து காவிரிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

  

நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு தமிழகம் வந்தடைந்துள்ளது. கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் இன்று காலை தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது. விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்துள்ளது.

நேற்று நிலவரப்படி 500 கன அடியாக இருந்து வந்த தண்ணீர் வரத்தானது கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இன்று காலை ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேரளம், வயநாடு, கர்நாடகம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

இதனால், அணையின் பாதுகாப்பைக் கருதி 1 ஆம் தேதி முதல் 10 ஆயிரம், 20 ஆயிரம், 25 ஆயிரம், 27 ஆயிரம் என்ற விகிதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக கர்நாடக எல்லைக்கு விநாடிக்கு 1000 கன அடியாக தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கட்டியது.

கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், தற்போது கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆறு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.