சிரேஸ்ட ஊடகவியலாளர் முத்தையா சிவலிங்கம் மரணம்!

31.08.2021 05:03:15

இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான முத்துசிவன் என்றழைக்கப்படும் முத்தையா சிவலிங்கம் சுகவீனம் காரணமாக நேற்று காலமானார். 

கொரோனா தொற்று காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன் தினம் தனது வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில்  நேற்று காலை அவர் மரணமடைந்தார்.

78 வயதான அவர் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றியுள்ளதுடன், வீரகேசரி, உதயன் போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றி, எழுத்து துறையிலும் தனது பங்களிப்பினை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.