'யாரையும் யாரும் காணாமலடிக்க முடியாது' .
|
அண்மையில் நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் 'எங்கே அப்பாவை காணும்' என்ற பேச்சு கண்டனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசனும் கண்டித்திருக்கிறார். திருவாரூரில் முன்னாள் அமைச்சர் மதிவாணனின் இல்ல திருமண விழா நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேசுகையில், ''யாரையும் யாரும் காணாமலடித்து விட முடியாது. அப்படி பேசுவது பைத்தியகாரத்தனம்.
|
|
காணாமலடித்து விட முடியுமா? ஒருபோதும் முடியாது. யாரையும் அடிக்க முடியாது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதில் எனக்கு எந்த சங்கடமும் கிடையாது. அண்ணன் தம்பியாக தான் பழகிக் கொண்டிருக்கிறோம். ஒரே ஊர்க்காரர்கள் நாங்கள். ஒரே தொகுதியைச் சேர்ந்தவர்கள். எந்த நேரமும் எப்படி வேண்டுமானாலும் பார்த்து பேசுவேன். அதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. அதுபோல்தான் இன்னைக்கும் அவரைப் பார்த்தேன். பேசி விட்டு வந்தேன். என் மனதிற்குள் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. தேர்தலுக்குப் பிறகு அவரைப் பார்க்கவில்லை. எப்படி இருப்பாரோ என்னமோ, சரியா பேசுவாரா நம்மிடம், சோர்வாக இருப்பாரா, சங்கடத்தில் இருப்பாரா என்ற ஒரு கற்பனையில் வீட்டுக்குப் போகும்போது முந்தாநாள் நான் பார்த்த மு.க.ஸ்டாலினை தான் இன்னைக்கும் பார்த்தேன். எந்த சோர்வும் இல்லை. வழக்கமான வரவேற்பு தான். வழக்கமான உபசரிப்பு தான் கலகலவென்று. அப்படித்தான் உரையாடிக் கொண்டிருந்தோம். இந்த உரையாடல் என்பது தொடரும்'' என்றார். |