நடைமுறை மீறல் : வீரர்களை நாட்டுக்கு அனுப்ப முடிவு
28.06.2021 19:40:49
பயோ பபிள் நடைமுறைகளை மீறியமைக்காக குசால் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அணி மேலாளரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள் அந்நாட்டு பயோ பபிள் நடைமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து T20 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நேரத்தில் கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.