ஐநா அதிருப்தி!
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என உறுதியாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய மற்றும் சர்வதேச நியாயாதிக்க எல்லைக்கு பொருத்தமான நடவடிக்கைகளை மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதுவரையிலான மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.