
பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா!
இந்தியாவிடம் கருணை காட்டுமாறு பாகிஸ்தானை கெஞ்சவைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, 1960-இல் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. |
இந்திய அரசு, ‘இரத்தமும் நீரும் ஒரே நேரத்தில் ஓட முடியாது’ என்ற கடுமையான நிலைப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தான் வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ள நிலையில், இந்தியா ஜம்மு மற்றும் காஷ்மீரில் நீர்சக்தி திட்டங்களை வேகமாகத் துவக்கி, பாகிஸ்தானை அதிக அழுத்தத்தில் கொண்டு வருகிறது. எந்த திட்டங்கள் முன்னேறுகின்றன? சினாப் (Chenab) நதியில் நடைபெறும் முக்கிய நீர்சக்தி திட்டங்கள்: 1000 மெகாவாட் பாகல் துல் (Pakal Dul) 624 மெகாவாட் கிறு (Kiru) 540 மெகாவாட் க்வார் (Kwar) இவை அனைத்தும் 2026 மே முதல் 2028 ஜூலைக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் முதலில் முடிவடைய உள்ள திட்டம் ரத்லே திட்டம், இது 2026 மே மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும். இது NHPC மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநில மின் வளர்ச்சி கழகம் இணைந்து செயல் படுத்தும் திட்டம். இந்த ஒப்பந்தம் சிந்து நீர்நிலைக் கண்காணிப்பு அமைப்பின் 6 நதிகளை அடிப்படையாகக் கொண்டது. இதன் படி மேற்குப் பகுதிநதிகள் – சிந்து, ஜீலம், சினாப் ஆகியவை பாகிஸ்தானுக்கு, கிழக்குப் பகுதிநதிகள் – ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகியவை இந்தியாவுக்கே என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ரத்லே திட்ட வடிவமைப்புக்கு மீண்டும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்தியா அதைப் பொருட்படுத்தவில்லை. |