ட்ரம்பின் துணை அதிபர் தெரிவு

17.07.2024 07:38:49

அமெரிக்க அதிபர் வேட்பாளராக களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் (J. D. Vance) என்பவரை தேர்ந்தெடுத்துள்ளார்.

குறித்த நபர், உக்ரைனுக்கு (Ukraine) ஆயுத உதவி வழங்குவதில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களில் முதன்மையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் (European Union) தங்கள் கண்டத்தை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்காவை நம்பியிருப்பதை கைவிட வேண்டும் என்ற கொள்கையை அவர் முன்வைத்தவர் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தனது துணை அதிபராக ஜே.டி.வான்ஸை தெரிவு செய்திருப்பது ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப பதவியேற்றால், ஜே.டி.வான்ஸ், உக்ரைனுக்காக உதவிகள் அனைத்தையும் ரத்து செய்வார் என்று கூறப்படுகிறதுமேலும், உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தையையும் அவர் வலியுறுத்துவார்.

இதேவேளை, உக்ரைனின் கணிசமான பகுதிகள் ரஷ்யாவுக்கு கையளிக்கப்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.