வட்ஸ் அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

12.12.2022 00:13:10

 

நாளுக்கு நாள் பயனர்களின் வசதிக்காக சமூக வலைத்தளங்களில் புதிய மாற்றங்களும், புதிய வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் வட்ஸ் அப் நிறுவனமும் தனது வட்ஸ் அப் செயலியில் சில புதிய வசதிகளை மேம்படுத்தியுள்ளது.

இந்த புதிய வசதிகள் தொடர்பில் வட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

புதிய வசதி

கடந்த முறை வெளியாகிய தனக்கு தானே செய்தி அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி முறையை தற்போது கணினி பயன்பாட்டிலும் விரிவுபடுத்த உள்ளதாக வட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இதனை நடைமுறைப்படுத்துவற்கான சோதனை நடவடிக்கைகளும் நடைபெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட்ஸ் அப்பில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதியானது பீட்டா எனும் புதிய வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செயல்முறையை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு வசதி

இதேவேளை, செய்திகளை ஒருமுறை மட்டுமே வாசிக்கும் வகையிலான புதிய விடயமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.