தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு !

31.05.2021 12:30:55

 

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குமரிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.