வேட்டையன் படத்துல வெயிட்டான ரோல்தான்

02.07.2024 00:41:17

சென்னை: நடிகை துஷாரா விஜயனுக்கு தமிழில் மிகப் பெரிய அறிமுகத்தை கொடுத்த படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்திலேயே நட்சத்திரம் நகர்கிறது என்ற அடுத்த படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது தனுசுடன் ராயன், ரஜினிகாந்துடன் வேட்டையன் மற்றும் விக்ரமுடன் வீர தீர சூரன் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதில் ராயன் படம் இம்மாதம் 26ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் துஷாரா விஜயன் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வரும் அவர் வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்தும் தன்னுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்துள்ளார்.