பாடசாலைகள் மூடக்கம் - திருகோணமலையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று !

24.04.2021 09:49:06

திருகோணமலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், திருகோணமலை மாவட்ட கல்விப் பிரிவுகள் சிலவற்றில், மூன்று பாடசாலைகள் திகதி குறிக்கப்படாது மூடப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் கிரிஸ்டி லால் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, மஹாஓயா கல்வி வலயத்தில் குடா ஹரஸ்கல வித்தியாலத்தில் மாணவர்களில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளர்.

அத்துடன், திருகோணமலை அபயபுரம் வித்தியாலயத்தின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. '  

அதனையடுத்து அவ்விரு வித்தியாலயங்களும் மூடப்பட்டசீனக்குடா தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியானது அதனையடுத்து அப்பாட​சாலையும் மூடப்பட்டது.