தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது போதாது என்றும் ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வங்க கடலில் உருவான 'ஃபெஞ்சல்'புயலால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. |
இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. "விஜய் ஒன்றை புரிஞ்சிக்கணும்! தவெக மாநாடு முடிந்து எத்தனை முறை வெளியே வந்தார்? அண்ணாமலை சரமாரி " கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகை போதாது என்றும் ரூ.10,400 அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- கடலூரில் ஏற்பட்டுள்ள புயல் வெள்ளத்தால் விவசாய பயிர்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை வந்து விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது என்பது தான் எங்களுடைய கேள்வி. சாத்தனூர் அணையை திறந்து விட்ட பிறகுதான், இந்த பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணிக்கு 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடியை திறந்து விட்டு பெரிய பாதிப்பை மாநில அரசே ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கப்பட்டது. நகரமாக இருந்தாலும், கிராமங்களாக இருந்தாலும் பாதிப்பு ஒன்று தான். கிராமங்களில் இன்னும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னையை விட அதிக மழை பெய்ததுள்ளது. அப்படி இருக்கும் போது ஒரு ரேஷன் காருக்கு 2 ஆயிரம், ஒரு ரேஷன் கார்டுக்கும் 6 ஆயிரம்.. எப்படி அது நியாயம். எனவே ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும். மத்திய அரசு விதிளின் படி கணக்கிட்டு பார்த்தால் ரூ.10,400 கொடுக்க வேண்டும். முதல்வர் கிராமப்புற பகுதிகளுக்கு வரவேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் வர வேண்டும். கிராமப்புற பகுதிக்கு வந்தல்தால் எந்த அளவு சேதாரம் இருக்கிறது என்று தெரியும். இவ்வாறு அவர் கூறினார். |