இலங்கை தொடர்பில் 15 தொண்டு நிறுவனங்கள் விடுத்த முக்கிய அறிவிப்பு

01.07.2021 09:00:00

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யும் வரை அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பதினைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு இலங்கைக்கு ஜி எஸ் பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்தன.

இதற்கிடையில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அது இரத்து செய்யப்படாது என்றும் அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.