எமிரேட்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !
04.07.2021 09:31:15
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பயணிகளை அழைத்துச் செல்வதை இடைநிறுத்த எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஜூலை மாதம் 15ஆம் திகதி வரையில் இந்தத் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த இரண்டு வாரங்களுக்கு குறித்த நாடுகளுக்குச் சென்றிருந்த எந்தவொரு பயணியும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பிரவேசிக்க எதிர்வரும் 15ஆம்திகதி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.