130 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!
26.10.2021 05:15:17
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் குழு 2 இற்கான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களைப்பெற்றுக் கொண்டது.
இதனையடுத்து 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 10.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.