சிலி நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

19.07.2024 07:51:56

சிலி: இன்று சிலி நாட்டில் உள்ள அன்டோபகாஸ்டாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் "ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சிலி நாட்டின் கடலோர நகரமான அன்டோஃபாகஸ்டாவில் இருந்து கிழக்கே 265 கிலோமீட்டர் தொலைவில் 128 கிலோமீட்டர் ஆழத்தில் நடந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் கிடுகிடுவென ஆடின. சில நிமிடங்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதிப்புகள் குறித்து எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. "வீட்டை விட்டு வெளியே வராதீங்க".. வங்கதேச வன்முறையால் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை ‛வார்னிங்’ ஏஎப்பி செய்தியின்படி, இதுவரை நிலநடுக்கம் ஏற்பட்ட சிலி நாட்டின் அன்டோஃபாகஸ்டா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம், வடக்கு சிலியின் தாராபாகாவில் 118 கிமீ ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது எந்த பாதிப்பும் சிலி நாட்டில் ஏற்படவில்லை. சிறிய அளவில் மட்டுமே வீடுகள், கட்டிடங்கள் குழுங்கின. பற்றி எரியும் வங்கதேசம்.. இடஒதுக்கீடு எதிர்ப்பால் கடும் வன்முறை.. 32 பேர் பலி.. பிரதமர் தான் காரணமா? பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று. அந்த வகையில்,. உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் சிலியும் ஒன்றாக இருக்கிறது. சிலி நாடு பசிபிக் பெருங்கடலின் "ரிங் ஆஃப் ஃபயர்" இல் அமர்ந்திருக்கிறது. இந்த இடம் பூமியின் பல எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படும் கொந்தளிப்பான பகுதியாகும். தூங்கும் எரிமலைகள் அவ்வப்போது வேலையை காட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதுடன் சுனாமியும் ஏற்படுகிறது.