வடமாகாண காணி ஆணையாளருக்கு அதிரடி இடமாற்றம்
20.07.2021 21:32:13
வடமாகாண காணி ஆணையாளர் குகநாதன் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் வடமாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தரவு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸினால் வழங்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சுமார் 4 வருடங்களுக்கு மேலாக வடமாகாண காணி ஆணையாளராக செயற்பட்ட குகநாதனை திடீரென ஆளுநர் வடமாகாண சபைக்கு பணி இடமாற்றம் செய்து கடிதம் கடிதம் அனுப்பியுள்ளார்.
குகநாதன் இன் பதவிக்கு வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக பதவி வகித்த எஸ்.சோதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.